செவாக் தின நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் இந்தியப் பிரதமர்

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஐக்கிய நாடுகள் செவாக் தின நிகழ்வை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்திய பிரதமரை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிடோர் வரவேற்றனர்.

அத்துடன், ஸ்ரீலங்காவின் தேசிய கலாச்சாரத்திற்கு அமைவாக இன்றைய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, பௌத்த மத அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் வைபவ அதிகாரிகள் எனப் பலர் விளக்கேற்றி வைத்தனர்.

தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானதுடன், மல்வத்த பீடாதிபதி சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரர் பஞ்சசீல வழிபாட்டு நிகழ்வை நிகழ்த்தி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபச, முன்னாள் பிரமர் டி.எம்.ஜயரத்ன, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்கள், 85 நாடுகளை சேர்ந்த பௌத்த பிக்குமார்கள், அரச பிரதிநிதிகள் உள்ளிட்ட இந்து கிறிஸ்தவ பௌத்த மதத்தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

‘பௌத்த போதனைகளின் அடிப்படையில் சமூக நீதியின் மூலம் உலக சமாதானத்தை நிலைநாட்டுதல்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரின் வழிகாட்டலில் பௌத்த மத அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சவின் தலைமையில் கீழ் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்காவில் 14 ஆவது தடவையாக ஐக்கிய நாடுகளின் வெசாக் வைபவம் இன்று ஆரம்பமான நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளது.

நிறைவு வைபவம் வரலாற்று சிறப்பு மிக்க புனித தலமான கண்டி தலதா மாளிகையை கேந்திர மையமாக கொண்டு நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here