ஜெய்சங்கர் மூலம் இந்திய பிரதமருக்கு தூதுவிட்ட வடமாகாண முதலமைச்சர்

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவால், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று இராப்போசன விருந்து வழங்கப்பட்டது.

இதில் ஜனாதிபதியுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர், சில அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இந்திய பிரதமர் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோர் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலின் போது,

பலாலி விமான நிலையத்தை ஒரு பிராந்திய விமான நிலையமாக செயற்படுத்த வேண்டும்.

அந்த விமான நிலையத்தை விஸ்தரிக்காமல் இதே நிலையில் வைத்துக் கொண்டு இந்தியா – இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்க வேண்டும்.

காங்கேசன்துறை துறைமுகத்தையும் விஸ்தரிக்காமல் இதே நிலையில் வைத்துக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் வழிப் போக்குவரத்தையும் ஆரம்பிக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இது தொடர்பில் இந்திய பிரதமருடன் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜெய்சங்கரிடம் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here