யாழில் 3 தினங்கள் இடம்பெறவுள்ள வடக்கின் மாபெரும் சுகாதாரக் கண்காட்சி

வடக்கின் மாபெரும் சுகாதாரக் கண்காட்சி யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் எதிர்வரும் 19 ஆம், 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சி யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் உயிரியல் பிரிவு மற்றும் கலைப்பிரிவு மாணவிகளின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

குறித்த கண்காட்சி மூன்று தினங்களிலும் காலை 10 மணிமுதல் மாலை 6.30 மணிவரை இடம்பெறவுள்ளதோடு இந்த மாபெரும் கண்காட்சியில் சுகாதார நிறுவனங்களின் நூறுக்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்கள் இடம்பெறவுள்ளன.

குறித்த கண்காட்சியில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக் கண்காட்சி இடம்பெறும் மூன்று தினங்களும் சுகாதார அமைச்சினால் விசேட விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here