ஆசனப்பட்டி அணியாது வாகனத்தில் சென்றவருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று (12) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

இதேன்போது குற்றவாளி தன் மீது உள்ள குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனால் குற்றவாளியை ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.