வெலிகம பகுதியில் வர்த்தகர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம, பாத்கம விகாரைக்கு அருகில் தன்சல் வழங்கிய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்தி மற்றும் ஆயுதங்களினால் கடுமையாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

விகாரைக்கு அருகில் இரவு தன்சல் வழங்கிய பின்னர் அதனை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்தவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

35 வயதுடைய விஜேசேகர கமாச்சிகே சுசந்த என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வர்த்தகர் வெசாக் போயா தினத்தை முன்னிட்டு மேலும் சிலருடன் இணைந்து தன்சல் வழங்கியுள்ள நிலையில், தன்சல் வழங்கிய அந்த இடத்தை சுத்தப்படும் போதே இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த வர்த்தகர் கத்தி குத்துக்கு இலக்காகி ஓடும் போது பின்னால் துரத்தி சென்று மீண்டும் அவரை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட வர்த்தகரை மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதற்கு வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.