யாழ் ஆயரின் குற்­றம்­சாட்டை கண்­டிக்­கின்­றேன்

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் பத­வியை நான் அர­சி­யல்­வா­தி­க­ளின் காலில் வீழ்ந்­து­தான் பெற்­றுக்­கொண்­டேன் என்று யாழ். ஆயர் கூறி­யி­ருப்­பது ஆதா­ர­மில்­லாத குற்­றச்­சாட்டு என்றும் யாழ் ஆயரின் குற்­றம்­சாட்டை நான் வன்­மை­யா­கக் கண்­டிக்­கின்­றேன் என்­றும் நிரா­க­ரித்­தி­ருக்­கி­றார் புதிய துணை­வேந்­தர்.

சில நாள்­க­ளின் முன்­னர் பொது நிகழ்வு ஒன்­றில் பேசிய யாழ். ஆயர் மேதகு ஜஸ்­ரின் பேனாட் ஞானப்­பி­ர­கா­சம், யாழ். பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் நிய­ம­னம் குறித்­துக் கார­சா­ர­மாக விமர்­சித்­தார்.

‘‘பல்­க­லைக்­க­ழ­கப் பேர­வை­யால் முத­லா­வது நப­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்­ட­வர் இருக்­கத்­தக்­க­தாக, அர­சி­யல்­வா­தி­க­ளின் கால்­க­ளில் போய் வீழ்ந்­த­வர் துணை­வேந்­த­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார். இப்­படி நிய­ம­னம் பெற்­ற­வரை மாண­வர்­கள் மதிப்­பார்­களா? விரி­வு­ரை­யா­ளர்­கள் மதிப்­பார்­களா? கல்­வி­யின் நிலை எங்கே போகி­ற­து’’­என்று காட்­ட­மா­கக் கருத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார் ஆயர்.

இது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த புதிய துணை­வேந்­தர் ஆர்.விக்­னேஸ்­வ­ரன், “யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் தெரி­வில் முத­லி­டத்­தில் இருந்­த­வ­ருக்­குக் கிடைக்­க­வேண்­டிய பத­வியை நான் அர­சி­யல்­வா­தி­க­ளின் காலில் வீழ்ந்­து­தான் பெற்­றுக்­கொண்­டேன் என அண்­மை­யில் நிகழ்வு ஒன்­றில் கலந்­து­கொண்ட யாழ்ப்­பாண மறை மாவட்ட ஆயர் ஆதா­ர­மில்­லா­மல் குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தார்.

ஆய­ரின் இந்­தக் கருத்தை நான் வன்­மை­யா­கக் கண்­டிக்­கின்­றேன்” என்­றார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது….

துணை­வேந்­தர் தெரி­வுக்கு மூவ­ரின் பெயர்­கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டன. அதில் முத­லா­வது இடத்­தில் பேரா­சி­ரி­யர் சற்­கு­ண­ரா­ஜா­வும் இரண்­டா­வது இடத்­தில் நானும் இருந்­தோம். பல்­க­லைக்­க­ழக மானி­யங்­கள் ஆணைக்­கு­ழு­வால் அரச தலை­வ­ருக்கு எமது பெயர் விவ­ரங்­கள் அனுப்பி வைக்­கப்­பட்­டன.

அதே­நே­ரத்­தில் நாங்­கள் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இணைந்த காலத்­தி­லி­ருந்து எமது செயற்­பா­டு­கள் தொடர்­பா­கப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரின் அறிக்­கை­க­ளும் அரச தலை­வ­ருக்கு முன்­வைக்­கப்­பட்­டன. அந்த அறிக்கை முத­லா­மி­டத்­தில் இருந்­த­வ­ருக்­குப் பாத­க­மா­க­வும் எனக்­குச் சாத­க­மா­க­வும் இருந்­த­மை­யால் முத­லாம் இடத்­தில் இருந்­த­வர் தட்­டுப்­பட்டு இரண்­டா­வ­தாக இருந்த எனக்­குத் துணை­வேந்­தர் நிய­ம­னம் கிடைத்­தது.

பல்­க­லைக்­க­ழ­கப் பேரவை உறுப்­பி­ன­ராக இருந்த யாழ்ப்­பாண ஆய­ருக்­குப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் தெரிவு முறை­கள் தொடர்­பில் விளக்­கம் இல்­லையா?முன்­னைய காலங்­க­ளில் மூன்­றா­மி­டத்­தில் இருந்­த­வர்­கள் துணை­வேந்­த­ராக நிய­மிக்­கப்­ப­டும்­போது அவர் அமை­தி­யாக இருந்­தது ஏன்?

ஒரு மதத்­தின் குரு முதல்­வ­ராக இருந்து கொண்டு தர­வு­களை ஆரா­யா­மல் இழி­வான வார்த்­தை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது மரி­யா­தைக்­கு­ரி­ய­தல்ல. தனக்கு ஏற்ற வகை­யில் அவர் கருத்­துக்­களை முன்­வைப்­பதை நான் வன்­மை­யா­கக் கண்­டிக்­கின்­றேன் -என்­றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here