வவுனியாவில் சிறைக்கைதி உயிரிழப்பு

வவுனியா சிறைக்காவலில் வைக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

வவுனியாவிலுள்ள சிறையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சி.சமூவேல் (66 வயது) என்ற மன்னார் பகுதியைச் சேர்ந்த சிறைக்கைதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த கைதி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலம் மருத்தவப்பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here