வீதியில் இறங்கி போராட வருமாறு தமிழ் தலைமைகளுக்கு அழைப்பு

தம்முடன் வீதியில் இறங்கி போராட வருமாறு தமிழ் அரசியல் தலைமைகளுக்கு அழைப்பு விடுப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் பிரதிநிகள் கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பு தொடர்பில் மேலும் தெரிவித்த உறவுகள், அரசியல்வாதிகளை நம்பி பல ஆண்டுகளை வீணடித்து நம்பிக்கை இழந்த நிலையிலே நாம் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தோம்.

எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்களை எட்டவுள்ள போதிலும் எமது பிரச்சினையை யாரும் கண்டுக் கொள்வதாக இல்லை. எனவே, அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் புதிய வடிவில் போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பிலே இன்று கலந்துரையாடப்பட்டது.

மேலும், எமது தலைமைகள் கதிரைகளை அலங்கரிக்கவே இருக்கின்றார்களேயன்றி எமது பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கல்ல என்றும் குறிப்பிட்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here