20 ஆம் திகதி சம்பூருக்கு விரைகிறார் ஜனாதிபதி

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 40 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட திருகோணமலை சம்பூர் வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு இந்த மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

குறித்த வைத்தியசாலையையும், ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள சம்பூர் கலாச்சார மண்டபம், கடற்கரை பூங்கா போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை பார்வையிட்ட பின்னர் இன்று(12) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

23 ஆளனியுடன் உள்ள இந்த வைத்தியசாலையில் தாதியர் விடுதி, வைத்தியர் விடுதி, நோயாளர் விடுதி, வெளிநோயாளர்ப் பிரிவு கொண்ட முக்கிய பிரிவுகள் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதுமேலும், அதற்கான அனைத்து விதமான வைத்திய வளங்களும் வழங்கப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் குறிப்பிட்டுள்ளார்.

  

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here