கடமையிலிருந்த பயணச் சீட்டு பரிசோதகர் மீது தாக்குதல்: இருவர் கைது

மதவாச்சி புகையிரத நிலையத்தில் கடமையில் இருந்த பயணச் சீட்டு பரிசோதனையாளர் ஒருவர் பயணிகளின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

பயணச் சீட்டு இன்றி புகையிரதத்தில் பயணித்த 2 பயணிகள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே இவர் காயமடைந்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த குறித்த உத்தியோகஸ்தர் நேற்று இரவு மதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணிகளிடம் பயணச் சீட்டை கோரிய போதே, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் மதவாச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here