புனித லூசியா விளையாட்டுக்கழக மைதான புனரமைப்பிற்கான அடிக்கல்

மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டுக்கழக மைதான புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வு பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டுக்கழக மைதானத்தில் குறித்த விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது நிகழ்வில் பள்ளிமுனை பங்குத்தந்தை அருட்தந்தை ஸ்ரீபன், மன்னார்பிரதேசச் செயலாளர் பரமதாஸன், மன்னார் நகரசபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி அபிவிருத்தி பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.

இதேவேளை பள்ளிமுனை கிராம மக்கள், விளையாட்டு கழக வீரர்கள், பொதுஅமைப்பு, விளையாட்டுக்கழக பிரதி நிதிகள், பள்ளிமுனை மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here