போதைக்கு பயன்படுத்தும் மாத்திரைகளுடன் இருவர் கைது

வத்தளை – மாபோல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் போதைக்கு பயன்படுத்தப்படும் 400 வலி நிவாரணி மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் இந்த மாத்திரை எடுத்துச் சென்ற நபர்களை வத்தளை பிரதேசத்தில் வைத்து இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here