ஐக்கிய நாடுகள் 2017ஆம் ஆண்டு வெசாக் தின வைபவத்தின் நிறைவு நிகழ்விற்காக நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி கண்டி தலதா மாளிகைக்கு சென்றுள்ளார்.

கண்டி – தலதா மாளிகை மஹாமழுவைக்கு இன்று பிற்பகல் நேபாள ஜனாதிபதியுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் சென்றுள்ளனர்.

வெசாக் தின வைபவத்தின் நிறைவு நாளான இன்று விசேட தலதா கண்காட்சி ஒன்றும் தலதா பெரஹர நிகழ்வும் நடைபெறவுள்ளன.

இன்றைய இறுதி நிகழ்வில் பிரதம அதிதியான நேபாள ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.