வெலிகந்த காட்டுப் பகுதியிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

வெலிகந்த எசலபுர காட்டுப் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அவசர தொடர்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் வெலிகந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here