5ஆவது நாளாக ஜெர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம்

தமிழின அழிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து பரிகார நீதியை பெற்று கொள்ளும் வகையில் ஜெர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் இன்றைய தினம் 5ஆவது நாளாக Köln நகரத்தை வந்தடைந்து.

இதன்போது அங்குள்ள பிரசித்தி பெற்ற தேவாலயத்துக்கு முன்பாக தரித்து நின்று, கண்காட்சிப் பதாதைகளை அமைத்து மனித நேய பணியாளர்களால் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று மாலை எசன் நகரை நோக்கி சென்று அங்கு நகரமத்தியில் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதோடு, இறுதியில் மாவீரர் தூபிக்கு சென்று வணக்க நிகழ்விலும் கலந்துகொள்ளவிருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here