இன்றைய ராசி பலன் 15/5/2017

மேஷம்: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இஷ்டதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம் : நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் தாராள வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

மிதுனம் : அன்றாடப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். சேமிப்பு உயரும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கடகம்: உறவினர் விஷயத்தில் அதிருப்தி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் செலவுக்காக கடன் வாங்க நேரிடலாம். சுபவிஷயத்தில் தாமதம் உண்டாகும்.

சிம்மம் : குடும்ப பிரச்னையில் சுமுக தீர்வு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். நிலுவைப் பணம் வசூலாகும். நண்பருக்கு தேவையான உதவி புரிவீர்கள். பெண்கள் ஆன்மிக நாட்டம் கொள்வர்.

கன்னி : குடும்ப விஷயத்தைப் பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவை. லாபம் சுமார். பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். விஷப்பிராணிகளிடம் விலகவும்.

துலாம்: அவமதித்தவரும் அன்பு பாராட்டுவர். முயற்சிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். உறவினரால் உதவி உண்டு.

விருச்சிகம்: பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரத்தில் மிதமான ஆதாயம் காண்பீர்கள். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடும். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. நண்பரால் உதவி உண்டு.

தனுசு : உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசு வகையில் நன்மை கிடைக்கும்.

மகரம் : குடும்பத்தினர் பாசத்துடன் நடப்பர். தொழில், வியாபாரத்தில் திட்ட மிட்ட இலக்கு நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு மகிழ்வர்.

கும்பம் : நண்பரின் பேச்சால் வருத்தம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் சராசரி பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்பநலனில் அக்கறை காட்டுவர். வீடு, வாகன வகையில் செலவு உண்டாகும்.

மீனம் : மற்றவர் விமர்சனத்தைப் பொருட்படுத்த மாட்டீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். வீடு வாகனத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள். பூர்வ சொத்து மூலம் ஆதாயம் கிடைக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here