கீதா குமாரசிங்கவின் மேன்முறையீடு இன்று விசாரணைக்கு

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் மேன்முறையீடு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்யும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் கீதா மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்வது குறித்த தீர்மானத்திற்கு கடந்த 12ம் திகதி இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றில் கீதா மேன்முறையீடு செய்திருந்தார்.

இதேவேளை, இந்த வழக்குத் தீர்ப்பு மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here