கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் இரட்டை பிரஜாவுரிமை! சுமந்திரனின் பதில்

இரட்டை பிரஜாவுரிமை கொண்ட யாரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இல்லை என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த அரசியல்வாதிகள் 6 பேரிடம் இரட்டை பிரஜாவுரிமை உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள்” என்றும் அண்மையில் சிங்கள ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எமது கட்சிக்கு வழங்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் கூட்டமைப்பின் எந்தவொரு உறுப்பினர்களும் இரட்டைப் பிரஜாவுரிமையை கொண்டிருக்கவில்லை.

ஆகவே இந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரிட்டன், கனடா, அமெரிக்கா, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கான குடியுரிமையையே குறித்த வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் பெற்றுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here