ஜெர்மனியில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை சுமந்து நிற்கும் மரம்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு சுமந்து 2012 ஆண்டு ஜெர்மனி பெர்லின் நகரில் மிகப் பிரசித்தி பெற்ற பூங்காவனத்தில் பாதுகாப்பான பகுதியில் அப்பிள் மரமொன்று நாட்டப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் பேர்லின் வாழ் சில உறவுகள் இந்த மரத்தை பார்வையிட்டு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

குறித்த மரத்தில் “எப்படி அந்த மரம் தனது வேர்களை ஆழமாய் வளர்த்து மண்ணுக்குள் நிற்கின்றதோ அதே போல் தாயகத்தில் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவுகள் எத்தனை வருடங்கள் சென்றாலும் எமது நெஞ்சத்தில் வேர் ஊண்டி நிற்கும்” என்ற வாசகம் ஜெர்மன் மொழியில் பலகையில் பொறிக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here