தமிழ் இன அழிப்பு நினைவு நாளை முன்னிலைப்படுத்திய தொடர் சைக்கிள் ஒட்டத்தின் 2 ஆவது நாள் நேற்று க்ளாஸ்கோவிலிருந்து பெர்னித்தை நோக்கி நடை பெறுகின்றது.

எதிர்வரும் 18 ஆம் திகதி நினைவு கூறப்படவுள்ள தமிழ் இன அழிப்பு நாளை முன்னிலைப்படுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்கொட்லாந்திலிருந்து லண்டன் வரையான 6 நாட்கள் கொண்ட தொடர் சைக்கிளோட்டம்  ஸ்கொட்டிஸ் பாராளுமன்ற முன்றலிலிருந்து ஆரம்பமானது.

இந்நிலையில் 2 நாளான நேற்று க்ளாஸ்கோவிலிருந்து பெர்னித்தை நோக்கிய பயணம் நடைபெறுகின்றது. 125 மைல்கள் கொண்ட இத்தூர பயணப்பாதையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் குமார் மற்றும் கிருஷாந், விஜய் ஆகியோர் பங்கேறுள்ளனர்.

நீதி கோரிய இச்சைக்கிள் ஓட்டம் க்ளாஸ்கோ, பென்றித், மான்செஸ்டர், பேர்மிங்காம், கவுன்றி, மில்டன்கிங்ஸ் மற்றும் லூட்டன் வழியாக 517 மைல்கள் பயணித்து இறுதியாக எதிர் வரும் 18 ஆம் திகதி இன அழிப்பு நினைவு நாள் நடைபெறும் இலக்கம் 10 டவுனிங் வீதியை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.