மட்டக்களப்பு வைத்தியசாலையில் திடீர் தீவிபத்து

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிசுக்களுக்கான விசேட சிகிச்சைப் பிரிவில் உள்ள மின் ஆழியில் இன்று நண்பகல் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிசுக்களுக்கான விசேட சிகிச்சைப் பிரிவில் உள்ள மின்சார இணைப்பில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது சிசுக்களுக்கும், தாய்மார்களுக்கும் எதுவித ஆபத்துக்களும் இன்றி பாதுகாப்பாக வேறு விடுதிகளுக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன .

இருந்த போதிலும் சம்பவம் தொடர்பாக முழுமையான செய்திகளை சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு சிசுக்களுக்கான சிகிச்சைப் பிரிவினுள் செல்ல அதிகாரிகளினால் அனுமதிக்கப்படவில்லை .

குறித்த சம்பவம் தொடர்பில் சிசுக்களுக்கான விடுதியில் இருந்த தாய்மார்கள் தெரிவிக்கையில்,

இந்த மின்சார இணைப்பு பகுதியில் கடந்த இரண்டு நாட்காளாக மின் ஒழுக்கு ஏற்பட்டு புகை மனம் வீசியதாக வைத்தியசாலை தாதியர்களிடம் தெரிவித்த போதிலும் எவரும் இதை கவனத்தில் கொள்ளவில்லை என கவலை தெரிவித்தனர் .

இந்த சம்பவம் தொடர்பாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம்.எஸ்.என் இப்ரா லெப்பையிடம் கேட்டபோது இது தொடர்பான எதுவித கருத்துக்களையும் தெரிவிக்க போதில்லை என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here