நெடுந்தீவு குமுதினிப்படுகொலையின் 32ஆவது ஆண்டு நினைவு கூரல் இன்று மாவிலித்துறையில் அமைந்துள்ள குமுதினிப் படுகொலை நினைவாலயத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன், கனகரத்தினம் கஜதீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பசுந்தீவு ருத்திரனின் நீலக்கடலலையின் நினைவுகள் பாகம் ஒன்று நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

நூலின் முதல் பிரதியினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியிட்டு வைக்க நெடுந்தீவு பாடசாலைகளின் கனடா ஒன்றித்தின் தலைவர் அதனை பெற்றுக் கொண்டார்.

மேலும், இந்த நினைவுகூரலில் மத குருமார்கள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.