முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாம் நாள் (அழைப்பு)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு, நாளை மாலை 5.00மணிக்கு கல்லடி கடற்கரையில் நடைபெறவுள்ளதுடன், வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்ததின்போது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவு கூர்ந்து வடக்கில் நடத்தப்பட்டு வருவதுடன் கிழக்கு மாகாணத்திலும் அதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்கீழ் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு கல்லடி கடற்கரையில் நடத்தப்படவுள்ளது.

இதேவேளை, குறித்த நிகழ்வில் கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரையும் வருகைதந்து நினைவுகூரலில் பங்கேற்குமாறும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here