வவுனியாவில் முள்ளிவாய்க்கால் தினம் அனுஷ்டிப்பு

வவுனியா மாவட்ட செயலகத்தில் முள்ளிவாய்க்கால் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று (14) மாலை 6.00 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டார வன்னியன் நினைவுத்தூபிக்கு முன்பாக குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் குறித்த அனுஷ்டிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாணசபை உறுப்பினர் செ.மயுரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here