இலங்கை வாழ் நேபாள் நாட்டு மக்களை சந்தித்தார் பந்தாரி

இலங்கை வாழ் நேபாள் மக்கள் மற்றும் தேரர்களை நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன்போது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தேரர்களினால் நிறைவேற்றப்படவேண்டிய சேவைகள் குறித்து நேபாள ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

இதில் நேபாள ஜனாதிபதிக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் நேபாள நாட்டின் இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், ஐக்கிய நாடுகள் சர்வதேச வெசாக் வைபவத்தில் கலந்து கொள்வதற்காக ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேபாள நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here