மட்டக்களப்பில் வண்டுகளுடன் பேரிச்சம் பழம் விற்பனை

மட்டக்களப்பில் உள்ள பிரபலமான கடை ஒன்றில் விற்பனை செய்யும் பேரிச்சம் பழங்களில் வண்டுகளையும் சேர்த்து விற்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மட்டக்களப்பில் சுகாதாரம் சிறந்த முறையில் இருப்பதாக கூறப்படுகின்ற போதும் இவ்வாறு மக்களுக்கு பாதிப்பையும், வருத்தத்தையும் ஏற்படுத்தும் அளவில் விற்பனை செய்யும் கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளே இது தொடர்பாக அசமந்த போக்கை கடைப்பிடிப்பது ஏன்? இது போன்ற பணம் படைத்த பாரிய முதலாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here