அவுஸ்திரேலிய நாட்டின் உயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹட்ச்செசன் மற்றும் அவரது குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்துள்ளனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் பணிமனையில் இன்று காலை 9.30 மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது

இதன்போது உல்லாசத்துறையினை விருத்திசெய்வது தொடர்பிலும், ஆசியா பவுண்டேசன் நிறுவனத்தின் நிதி உதவியுடன் கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும், மாகாண மட்டங்களில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.