இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தருமாறு உள்நாட்டு விவகார வயம்ப அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.நாவின்ன உத்தரவிட்டுள்ளார்.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்துக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 20 முதல் 25 வருட ஆவணங்களை தாம் கோரியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கடந்த வாரத்தில் இது தொடர்பான கோரிக்கையை குடிவரவு திணைக்களத்திடம் விடுத்திருந்த நிலையிலேயே அமைச்சரின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த தரப்பின் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தினால் அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த பெயர் பட்டியல் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.