இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் நேரடி விமானசேவை

இலங்கை மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமான சேவையினை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிகாரிகள் மட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் முறையான விமான சேவையினை கட்டியெழுப்பும் நோக்கில் விமான சேவைகள் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும், அதன் பின்னர் உடன்படிக்கையின் அம்சங்களை செயற்படுத்துவதற்கும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவிலான இலங்கையர்கள் கனடாவில் வசித்து வருகின்றனர். எனினும் இதுவரையில் இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் எவ்விதமான நேரடி விமான சேவை உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here