சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை மதுபான போத்தல்கள் மற்றும் சிகரட் பக்கற்றுக்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீன நாட்டு பிரஜை ஒருவரே நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சந்தேகநபர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.