சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக எல்லை சைபர் மத்திய நிலையம் ஒன்றை இலங்கையில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தொலைத்தொடர்பு மற்றும் ஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதற்காக மைக்ரோசொப்ட் நிறுவனம் உட்பட மேலும் பல நிறுவனங்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஊடாக இலங்கையின் கணினி கட்டமைப்பின் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்யமுடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நாட்களில் உலகில் வேகமாக பரவும் கணினி வைரஸ் இலங்கைக்கு இதுவரையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும், இது தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் ஆயத்தமாக இருப்பதாக கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.