ஜனாதிபதியின் இயலாமைக்கு இவர்களே காரணம் : புரவசி பலய

ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதிமொழிகளை செய்யாமல் போனமைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய புரவசி பலய என்ற தன்னார்வு நிறுவனமே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

அனைவராலும் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட புதிய அரசியலமைப்பு இவற்றில் ஒன்றாகும் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கத்தின் ஊழல்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவில்லை. அரசியலமைப்பு விடயத்தில் இன்னும் உறுதிப்பாடு இல்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறையில் இன்னும் தெளிவில்லாத நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் உள்ளனர் என்று புரவசி பலய சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here