மன்னார் நானாட்டான் மகாவித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மாணவர் பாராளுமன்றத்தின் 3ஆம் கட்ட அமர்வானது நேற்று  நடைபெற்றது.

இந்த பாராளுமன்ற அமர்வுகளின் போது பொறுப்புக்கள் வழங்கப்பட்ட அமைச்சுக்கள் தாங்கள் நடை முறைப்படுத்த இருக்கும் செயற்றிட்டங்களை முன்வைத்திருந்தன.

இதே வேளை முன்வைக்கப்பட்ட செயற்றிட்டங்களை நடை முறைப்படுத்துவதற்க்கான ஆலோசனைகள் பற்றியும் இதன் போது கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.