முள்ளிவாய்க்கால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை பல இடங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் முள்ளிவாய்க்காலிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த அஞ்சலி நிகழ்வுகளில் முதல் நிகழ்வாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் முள்ளிவாய்க்கால் பொது நினைவிடத்தில் காலை 9.00 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிற்பகல் 3.00 மணிக்கு மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜனின் தலைமையில் முள்ளிவாய்க்கால் தேவாலயப்பகுதியில் இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் நினைவு படிம கற்கள் பொறிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

மேலும், பிற்பகல் 4 மணிக்கு தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி கட்சியின் ஏற்ப்பாட்டில் முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் அஞ்சலி நிகழ்வுகள் அனுஷ்டிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரின் ஏற்ப்பாட்டில் முள்ளிவாய்க்கால் இரட்டைப் புளியடிப்பகுதியிலும் அஞ்சலி நிகழ்வுகள் அனுஸ்டிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here