யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் எற்பாட்டில் கண்காட்சி

யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பங்கு பற்றுதல்களை மேம்படுத்தும் வகையிலான “பனை மரத்தில் புத்தி கூர்மை” என்னும் தொனிப்பொருளிலான கண்காட்சி இன்று யாழ். மாவட்ட வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி, யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம் ஆகியோர்கள் கலந்து கொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தனர்.

இதில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பங்கு பற்றுதல்களை மேம்படுத்தும் வகையிலான சிறந்த கண்காட்சி மையங்கள், அது தொடர்பாக விளக்கங்களும் படைத்தலைமைய அதிகாரிகளால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த கண்காட்சி நாளையும் இடம்பெறும். குறித்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் பொறுப்பதிகாரி பிரிக்கேடியர் கேணல் அபய கோணவர்த்தன மற்றும் இராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here