யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளை ஆராய விசேட குழு!

மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோர் மற்றும் மீள் குடியேற்றப்பட்டுள்ளவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேயகோன் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அப்பிரதேச மக்கள் சில பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருந்தால் அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தது.

இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாகவே விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், இப்பிரச்சினைகள் குறித்த அறிக்கை ஒரு மாத காலத்தினுள் வழங்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட வனவளப் பாதுகாப்பு திணைக்கள அலுவலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here