தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

செல்லுப்படியாகாத கடவுச் சீட்டை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விமலுக்கு எதிராக வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, கொழும்பு மேலதிக நீதவான் துஷ்யந்த எபிடவல இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதவான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.