பழைய நினைவுகளை மீட்டிய முள்ளிவாய்க்கால் இலைக்கஞ்சி

பழைய நினைவுகளை மீட்டிய  முள்ளிவாய்க்கால்  இலைக்கஞ்சி

இன்றைய  தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் கிழக்கில்  இன்று  காலை ஒன்பது மணிக்கு இடம்பெற்றது  இன் நிகழ்வில்

சுவிஸ் அருள்மிகு சூரிச் சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தின்   இன் ஏற்பாட்டில்  வருகைதந்த அனைவருக்கும்  இலைக் கஞ்சி  வழங்கப்பட்டது

வழங்கப்பட்ட  கஞ்சியை குடித்த மக்கள்  நாட்டில் நிலவிய யுத்தத்தின் போது அக் கொடிய யுத்தத்தின்   கடைசி வாரங்களில் தமது  உயிரைக் காப்பாற்றிய உணவு என விரும்பி அருந்தியதனை காணக் கூடியதாக இருந்தது

அத்துடன்    மக்கள் பிரதி நிதிகளும் இது  உணமையாகவே  எமது பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்க வைக்கின்றது ஆனால் இவற்றை நினைக்கும் பொழுது  இறுதிக் கட்டத்தில் தமிழர் புனர்வாழ்வுக்  கழகத்தால்  வழங்கப்பட்ட  கஞ்சியைக் குடிப்பதற்கு வரிசையில்  நின்று இராணுவத்தின் கொண்டு வீச்சில் துடிக்கத்துடிக்க  இறந்த அந்த துன்பகரமான  நிகழ்வுகளும்  எமது கண்முன்னே  வந்து செல்கின்றது.

மேலும்  இந்த  உணவுக்குக்  கூட வசதி இல்லாமல்  அந்தக் குண்டு மழையிலும்  தப்பி  உணவின்றி எத்தனை உறவுகள்  எத்தனை குடும்பங்கள் எத்தனை குழந்தைகள்  உயிர்விட்ட  துயரச் சம்பவங்களும் கண்முன்னே வந்து செல்கின்றன என கவலையுடன் தெரிவித்தனர்

இவை அனைத்தும்  மறக்க அல்லது மறைக்க முடியாத உண்மையும் கூட  என அதனைப் பார்த்திருந்த மக்களும் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here