முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.

வவுனியா பறநாட்டுகல் ஒமந்தையை சேர்ந்த செந்தில்நாதன் சுதேசியன் என்னும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வவுனிய ஓமந்தையில் இருந்து உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவனும் தாயாரும் முள்ளிவாய்க்கால் மேற்கு சந்தி பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது, அதே திசையில் இருந்து வந்த சிறுரக வாகனம் ஒன்று சிறுவன் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் கூறியுள்ளார்.

குறித்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரரனைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.