இன்றைய ராசிபலன் 19/5/2017

மேஷம்: அன்றாட பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் விரும்பிய சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்களுக்கு, பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்: திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் உயரும். பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் குடும்ப வளர்ச்சி கண்டு மகிழ்வர். நண்பர்களால் நன்மை உண்டு.

மிதுனம்: உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். தாமதமான பணி ஒன்று எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் காண்பீர்கள். புத்திரர் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

கடகம்: திட்டமிட்டு செயல்பட்டு முன்னேறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் சுதந்திர உணர்வுடன் பணிபுரிவர். பெண்கள், புகுந்த வீட்டினரின் அன்பை பெறுவர். உறவினர்களால் உதவி கிடைக்கும்

சிம்மம்: குடும்ப சிரமம் பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். உடல் நலனில் கவனம் தேவை.

கன்னி: நற்செயலுக்கு உரிய பலன் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதாக நிறைவேறும். லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

துலாம்: பணியில் பொறுப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சுமாரான வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் உண்டாகும். வாகனப் பயணத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்: முக்கிய பணிகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி விலகும். லாபம் உயரும். பிள்ளைகள் வழியில் சுபச் செலவு செய்வீர்கள். பெற்றோரின் ஆசி கிடைக்கும்.

தனுசு: இடையூறு செய்தவரை இனம் கண்டு விலகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்களுக்கு, சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். அரசு வகையில் நன்மை கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றுவது நல்லது.

மகரம்: அன்றாடப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகும். வருமானம் உயரும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

கும்பம்: உறவினர் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். சுப விஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.

மீனம்: அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதம் ஆகலாம். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here