மாத்தறை கொட்டுவில பொலிஸ் பிரிவில் பண்டமுல்ல கடற்கரையில் ஒருவர் நேற்று(18) தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த நிலையில் விழுந்து கிடந்த குறித்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நுககஹாஹேன, பண்டமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான மஞ்சுள உதயகுமார என்ற நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மரணத்திற்கு பின்னரான பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளன.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கொட்டுவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.