பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஏற்றப்பட்ட பொதுச்சுடர் மழையிலும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தது.

இறுதி யுத்தத்தின் போது பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு  உலகெங்கும் தமிழர்களினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரித்தானியாவில் பிரதமர் வாசல் ஸ்தலத்திற்கு முன்னால் நடைபெற்ற நினைவேந்தலில் ஏற்றப்பட்ட பொது ஈகைச்சுடர் நிகழ்வின் இடைநடுவே மழை குறுக்கிட்ட போது அணையாது பிரகாசமாக சுடர்விட்டு ஒளிர்ந்துகொண்டிருந்தது.

கூரைகள் அற்ற வெளியில் வைக்கப்பட்டிருந்த இச்சுடர் மழையிலும் சுடர்விட்டு ஒளிர்ந்து எத் தடைகள் வரினும் முள்ளிவாய்க்காலில் உறவுகளின் படுகொலைக்கு நீதியை பெற்றாகவேண்டும் என்பதை உணர்த்தி நின்றது.