கோப்பாயில் விபத்து: குடும்பஸ்தர் பரிதாபகரமாக பலி

கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை கோப்பாய் சந்திக்கு அருகாமையில் பயணித்த கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கனரக வாகனத்தைக் கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் செலுத்துனர் தனது கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனத்தின் சக்கரங்களுக்குள் அகப்பட்டு பலியாகியுள்ளார்.

இந்த விபத்தில் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த ரட்ணகோபால் எனும் 63 வயதான வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.  

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here