நாங்கள் உங்களைத்தான் நம்பி இருக்கிறோம். எங்களை கைவிட்டு விடாதீர்கள் எனவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் காலைப் பிடித்து தாய்மார் அழுதசம்பவம் நேற்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின் போதே இச் சம்பவம்இடம்பெற்றுள்ளது.

இதன்போது சில தாய்மார் முதலமைச்சர் அஞ்சலி உரையாற்றுவதற்காக எழுந்து சென்ற போது,சம்பந்தன் ஐயாவை பேச விடாதீர்கள். அவரை வெளியேற்றுங்கள் ஐயா.

நாங்கள்சொத்துக்களை இழந்து விட்டோம். உறவுகளையும் இழந்து விட்டோம். உங்களைத் தான்நம்பியுள்ளோம். எங்களை கைவிட்டு விடாதீர்கள் என கூட்டமைப்பின் தலைவர்இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முதலமைச்சர்சி.வி.விக்கினேஸ்வரனின் காலைப் பிடித்து கதறினர்.