முள்ளிவாய்க்கால் நினைவை அனுஷ்டிக்கும் முகமாக கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் இரத்தானம் செய்வதில் மாணவர்கள் இன்று ஈடுபட்டதாக கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் எச்.டபிள்யூ.என்.ஐ. கருணாசேன தலைமையிலான வைத்தியக் குழுவினர் மாணவர்களின் இரத்த தானம் பெறுவதில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக அனைத்து சமூக மாணவர்களும் ஆசிரியர்களும் குருதிக் கொடை வழங்கியதாக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக பூஜை வழிபாடுகள் மற்றும் அஞ்சலி சுடர் ஏற்றும் நிகழ்வு என்பனவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.