யாழில் தொழில் தேடுபவரா நீங்கள்? வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

யாழ். மாவட்டத்தில் தொழில் தேடுவோருக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும்வகையில் மாவட்டப் பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையம் பல்வேறு நடவடிக்கைகளைநடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன் ஒரு கட்டமாக நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள முன்னணி தனியார்கம்பனியொன்றில் 250 வரையான தொழில் வெற்றிடங்களுக்கு ஆட்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகத் தேர்வு இன்று வெள்ளிக்கிழமை(19) யாழ். மாவட்டச்செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

க.பொ. த சாதாரண தரத்தில் குறைந்தது ஐந்து பாடங்களில் சித்தியடைந்தவர்கள்அல்லது க.பொ. த உயர்தரம் கற்ற நாற்பது வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலாரும்இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவர்கள் 0212219359எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியுமென மாவட்டப் பொதுமக்கள்தொழில் சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here