வவுனியா வசந்தி திரையரங்கிற்கு முன்பாக நேற்று (18) இரவு யாழ். சுகாதாரத் திணைக்களத்திற்குச் சொந்தமான லொறியொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

வீதியின் நடுவே அமைக்கப்பட்ட விளம்பர பலகையுடன் மோதுண்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறதுடன், லொறி சாரதிக்கு எந்த வித காயங்களும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

எனினும் நேற்று இரவு லொறி விபத்திற்குள்ளாகியிருந்த நிலையில் இன்று (19) காலை 9 மணிவரை லொறி அந்த இடத்திலேயே தரித்து நின்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று காலை வாகனத்தினை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.