வவுனியாவில் சிறுவர் பாதுகாப்பு இல்லம்(நந்தவனம்) வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த திறந்து வைப்பு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றதுடன், இதன்போது வைரவப்புளியங்குளத்தில் உள்ள சிறுவர் பாதுகாப்பு இல்லமே திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் விஸ்வரூபன், மாவட்ட சிரேஸ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் மனோகரராஜா, வடமாகாண சுகாதார அமைச்சரின் செயலாளர் சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் பா.சிந்துஜன், வவுனியாவை சேர்ந்த சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.