வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 11 வயது சிறுமி மரணம்

பிலியந்தலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் காரணமாக காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய மருத்தவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த 09ஆம் திகதி பிலியந்தலை பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கும்,போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நிகழ்ந்தது.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துடன் இரண்டு அதிகாரிகள் காயமடைந்திருந்தனர்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுமியின் சகோதரர் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here