ஹொங்கொங்கில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்தும் ஆபத்து?

ஹொங்கொங்கில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்துவதற்காகதடுப்பு முகாமில் வைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களை அவர்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கும் ஆபத்து உள்ளதாகவும்சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பல இரகசியங்களை கசியவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட அந்நாட்டின்தேசிய பாதுகாப்பு முகவரான எட்வேட் ஸ்னோவ்டன் 2013ம் ஆண்டு அங்கிருந்துதப்பிச்சென்று ஹொங்கொங்கில் அடைக்கலம் பெற்றார்.

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒரு இராணுவ அதிகாரி ஒருவரும் மற்றுமொரு குடும்பத்தைச்சேர்ந்த கணவன் மனைவி மற்றும் அவர்களின் பிள்ளைகள் என ஐந்து பேரே எட்வர்ட்ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கியிருந்தனர்.

அத்துடன், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அகதிகளும் அவருக்கு அடைக்கலம் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையர்களின் அகதி அந்தஸ்து விண்ணப்பத்தை ஹொங்கொங் குடிவரவுத்திணைக்களம் நிராகரித்துள்ளது.

ஹொங்கொங்கில் தமக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் அகதிகளுக்குஅகதி அந்தஸ்து மறுக்கப்பட்டமைக்காக, ஹொங்கொங் அரசாங்கத்துக்கு எட்வேட்ஸ்னோவ்டன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேலும், குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டால் அதன் பின்னர் ஏற்படும்விளைவுகளுக்கு ஹொங்கொங் அரசாங்கமே பதில் கூற வேண்டியேற்படும் என்றும்குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த இலங்கையர்களின் விண்ணப்பங்களை புதிதாக சமர்ப்பிக்கஅவர்களின் சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, அவர்கள் கனடாவிலும் குடியுரிமை கோரியுள்ள நிலையில், இதற்கான நடவடிக்கைகளைகனேடிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம்வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here